கின்னஸ் சாதனை படைத்த ஆச்சி மனோரமா.. ஆனாலும் கடைசி வரை நிறைவேறாத அந்த ஆசை

ஒரு நாடக நடிகையாக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி பின்னர் தமிழ் ரசிகர்களாலும், திரையுலகினராலும் ஆச்சி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் மனோரமா. இவர் தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் அனைத்து தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமைக்குரியவர். அந்த வகையில் அவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி கமல், சூர்யா, அஜித், விஜய் போன்ற அனைவருடனும் நடித்துள்ளார். இது தவிர 5 முதல்வர்களுடன் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.

நகைச்சுவை, குணச்சித்திரம் போன்ற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்து நடிப்பில் தனி முத்திரையைப் பதித்தவர். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த குரல் வளமும் உடையவர். சினிமாவில் அவர் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

இவ்வளவு சிறப்புகளை பெற்ற இவர் சினிமாவில் பத்மஸ்ரீ, கலைமாமணி, தேசிய விருது போன்ற பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும்.

திரையுலகில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த அவருக்கு ஒரு வருத்தமும் இருந்தது. அதாவது இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் மட்டும் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இது அவருக்கு மிகப் பெரிய குறையாக அமைந்தது.

மேலும் உடல் நலக் குறைவு இருந்தாலும் அவர் சினிமாவில் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்து வந்தார். இவரின் நடிப்பில் கடைசியாக சிங்கம் 3 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே மனோரமா மாரடைப்பால் உயிரிழந்தார்.

தன்னுடைய நடிப்பால், நடனத்தால், வசன உச்சரிப்பால் நம்மை பிரம்மிக்க வைத்த ஆச்சி இறுதிவரை அவர் விரும்பிய இயக்குனர் திரைப்படத்தில் நடிக்காமலேயே சென்றுவிட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்