சிம்புவின் அடுத்த ரிலீஸான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் (அஅஅ) படத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இந்தப் படத்தின் சென்னை உரிமையை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இதற்காக பெரிய விலையும் கொடுத்துள்ளது.

மதுரை – ராமநாதபுரம் விற்பனை உரிமை சுஷ்மா சினி ஆர்ட்ஸுக்கும், வட – தென்னாற்காடு விநியோக உரிமை செந்திலுக்கும் தரப்பட்டுள்ளது. ஏக போட்டி நிலவும் செங்கல்பட்டு ஏரியா உரிமையை லலித் என்பவர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி – கன்னியாகுமரி உரிமையை மணிகண்டன் பெற்றுள்ளார்.

சேலம் விநியோக உரிமை செல்வராஜுக்கும், கோவை உரிமை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டருக்கும தரப்பட்டுள்ளது.

இன்னும் ட்ரைலர், பாடல்கள் கூட வெளியாகாத நிலையில் இந்தப் படம் முழுவதுமாக விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக தயாராகும் அஅஅ-வின் முதல் பாகம் வரும் ஜூன் 23-ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறது.