சிம்பு நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகவுள்ள அன்பானவன் அசராதவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டெக்னிக்கல் டீமை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இரண்டு பாடல்களையும் கம்ப்போஸ் செய்து முடித்துவிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கிருஷ்ணன் வசந்த் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ‘டார்லிங்’ மற்றும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘தெறி’ மற்றும் ‘வேதாளம்’ படத்திற்கு எடிட்டிங் செய்த அந்தோணி ரூபன் இந்த படத்தின் எடிட்டராகவும், ‘தெறி’ மற்றும் ‘விஜய் 60’ படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த சத்யா இந்த படத்தின் காஸ்ட்யூம் டிசைனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராம்பன் என்பவர் கலை இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.