சிம்பு நடிப்பில் ஆபாச இயக்குனர் ஆதிக் இயக்கிய ‘AAA’ கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி சனிக்கிழமையே பல திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டார்கள். அனேகமாக சிம்பு நடித்த படங்களில் பெரும் தோல்வியை அடைந்தது இந்த படமாகத்தான் இருக்கும்

இந்த நிலையில் வரும் திங்கள் முதல் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்குகள் காலவரையற்ற நாட்களுக்கு மூடப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிம்புவின் ‘AAA’ படத்தையும் ஜிஎஸ்டியை இணைத்து மிமி கிரியேட்டர்கள் படுஜாலியாக மிமிக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர் திரையரங்குகள் ஸ்டிரைக் மட்டும் இல்லையென்றால் எங்கள் தல சிம்புவின் ‘AAA’, ‘பாகுபலி 2′ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கும்’ என்று மிமி போட்டுள்ளார். அந்த மிமியை பார்த்து பலருக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டதாக கேள்வி.