பல மாதங்களுக்குப் பிறகான சிம்பு படம் என்ற எதிர்பார்ப்போடு படம் பார்க்கச் சென்ற சிம்பு ரசிகர்களுக்கே படம் கடும் மன உளைச்சலை உண்டாக்கியதாகக் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். ‘ஏன் இப்படி ஆச்சு? என்ன தப்பா போச்சு?’ என்று ஆதிக் ரவிசந்திரனிடம் கேட்டேன்… ‘நான் நினைச்ச மாதிரி முழுப்படமும் எடுத்திருந்தா இந்த மாதிரியான விமர்சனம் வந்திருக்காது. எடுத்த வரைக்குமே நான் நினைச்சதை முழுசா படத்துல கொண்டுவர முடியலை.

இன்னும் சொல்லப்போனா, இந்தப் படம் எந்த மாதிரியான சூழல்ல எடுக்கப்பட்டதுனு ரசிகர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனாலதான் ரசிகர்கள் மத்தியில் இவ்ளோ வெறுப்பு. இதப்பத்தி நான் பேச விரும்பல. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்… நான் சொல்ல வந்த விஷயத்துல, 25 சதவிகிதம்தான் படத்துல வந்திருக்கு. நான் தயாரிப்பாளருக்காக விட்டுக்கொடுக்கப் போயி படம் பாதில நின்னுருச்சுனு நினைச்சு… ப்ச்… வேண்டாங்க! இதப் பத்தி நான் பேச விரும்பலை. ஆனா, இப்போ எல்லா தப்பும் என் மேல விழுந்திருச்சு. பரவாயில்லை!’’ என்றார் விரக்தியான குரலில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here