Tamil Nadu | தமிழ் நாடு
வரிசையாக வந்து போன மாப்பிள்ளைகள்.. விரக்தியில் பெண் செய்த காரியம்
தொடர்ந்து இரண்டு முறை பெண் பார்க்க வந்தும் கல்யாணம் கைகூடாத காரணத்தினால் இளம்பெண் இப்படி ஒரு முடிவு எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி பாஸ்கர். இவரது மகள் கிருஷ்டி(25)க்கு இரண்டு முறை மாப்பிள்ளை பார்த்தும் கல்யாணம் கை கூடவில்லை.
மேலும் பல முறை கல்யாணத்தைப் பற்றிய பேச்சு எடுத்தும் கடைசி வரை கை கூடவில்லை. விரக்தியில் இருந்த கிருஷ்டியை ஊர் மக்களும் ஒரு மாதிரி பேச ஆரம்பித்துவிட்டனர். இதனால் மனமுடைந்த கிருஷ்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த கிருஷ்டியின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
