சென்னை: சங்கத்தில் ஐக்கியமானால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளார் பிக்கப் டிராப்பின் லேட்டஸ்ட் காதலி. பிக்கப் டிராப் நடிகரின் லேட்டஸ்ட் காதலி என்று கூறப்படும் நடிகை திரையுலகினரிடம் இருந்து விலகியே இருக்கிறாராம். நடிகையாக இருந்து கொண்டு சினிமாக்காரர்களை பார்த்தால் தள்ளிப் போகிறாராம்.

அதிகம் படித்தவை:  தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவது உலகமக்களின் கடமை என உணர்த்திய சீமான்

ஆனால் பிக்கப் டிராப் நடிகருடன் மட்டும் எப்படியோ நட்பாகி, காதலாகிவிட்டதாம். நடிகைக்கு பட வாய்ப்புகள் இல்லை. விசாரித்தபோது சினிமாக்காரர்களை கண்டால் தெறித்து ஓடுவது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து வாய்ப்புகளை பெற என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஐடியாக கேட்டு வருகிறாராம். முதலில் சங்கத்தில் ஐக்கியமாகு, சினிமாக்காரர்களை ஒதுக்கி வைக்காதே என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாம். சரி என்று கூறி சங்கத்தில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளாராம் நடிகை.