Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சச்சோ! வட போச்சே! இனிமே இப்படி செய்ய மாட்டேன்! வருத்தப்படும் லேடி சூப்பர் ஸ்டார்!
பாகுபலி படத்தை வேண்டாம் என்றது என்னுடைய தவறு தான் என்பதை இப்போது தான் உணர்கிறேன் என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜாமௌலியின் பிரமாண்ட படைப்பான பாகுபலி2 தற்போது உலகளவில் ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தான் நடிக்காதது மிகப்பெரிய தவறு என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா ரோலுக்கு முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர் படக்குழுவினர். ஆனால், அப்போது மற்ற படங்களில் ரொம்ப பிஸியாக இருந்ததால் பாகுபலி படத்தை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அனுஷ்காவிடம் பேசி ஓகே வாங்கி பாகுபலி உருவாக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர். இப்படம் உலகளவில் ஹிட் கொடுத்ததைப் போன்று 2ம் பாகமும் உலகளவில் சாதனை படைத்து வருகிறது.
இது போன்ற தவறை இனிமேல் என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று தற்போது நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
