திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ்விங் டுகெதர் என்னும் வழக்கம் தற்போது பெருநகரங்களில் சாதாரணமாக இருந்து வருகிறது. அப்படி திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்ந்த, வாழும் நடிகர் நடிகைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சமந்தா – சித்தார்த்:

சமந்தாவும் சித்தார்த்தும் தெலுங்கு சினிமாவில் இணைந்து நடித்து அதன் மூலம் காதலாகி ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்தனர். பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்த சமந்தா தற்போது நாகசைத்தன்யாவை மணக்க போகிறார். இன்னும் இரண்டு வாரங்களில் சமந்தா திருமணம் நடக்க உள்ளது.

அஞ்சலி – ஜெய்:

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெய் மற்றும் அஞ்சலி வெகு காலமாக ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்தனர். தற்போது பலூன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்த அஞ்சலி தங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்லியுள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்:

இவர்கள் இருவரும் காதலித்து வரும் செய்தி வெகு காலமாய் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது சில நாட்களாய் இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்துவருகின்றனர்.

கமல் – கௌதமி:

விவாகரத்து பெற்ற கமலும் கௌதமியும் பல வருடங்களாக திருமணமாகாமல் இணைந்து ஒரே குடும்பமாய் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தனர். சில கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தது அனைவரும் அறிந்ததே.

நிரோஷா – ராம்கி:

தங்கள் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தொடர்ந்ததால் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்த இந்த ஜோடி ஒரு கட்டத்தில் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து இணைந்து வாழத்தொடங்கிவிட்டனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எப்படியோ சேர்ந்து நல்லா வாழ்ந்தா சரி