விக்ரம் படத்தைத் தொடர்ந்து சம்பவம் செய்யப்போகும் லோகேஷ்.. விஜய் பிறந்த நாளன்று காத்திருக்கும் ட்ரீட்

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மாஸ்டர். கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக திரையரங்குகளில் படம் வெளியாகாமல் இருந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கியது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து உலகநாயகனின் விக்ரம் படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் ஈடுபட்டுவந்தார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக விக்ரம் படம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது.

கமலஹாசனின் இந்த புதிய பரிமாணம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அனைத்து தரப்பு ரசிகர்கள் இடத்திலிருந்து இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இப்படத்திற்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 வது படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையாக எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களில் நடித்த வருகின்ற நிலையில் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

இந்நிலையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இதே நாள் அன்று விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு ட்ரீட் காத்திருக்கிறது. அதாவது லோகேஷ் உடன் விஜய் இணையும் தளபதி 67 படத்திற்கான அப்டேட் வர காத்திருக்கும்.

மேலும் தளபதி 67 படம் முழுக்க முழுக்க லோகேஷ் இன் படமாக இருக்கும் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கூறியிருந்தார். ஏற்கனவே விக்ரம் படம் வெளியாகி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில் தளபதி 67 படத்தில் லோகேஷ் என்ன செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்