Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் அடுத்த வாரிசு நான் தான்.. ஓவர் அலப்பறையை கூட்டும் டாப் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த திரை வாரிசு நான் தான் என ஒரு டாப் நடிகர் நம்பிக்கையில் இருந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு இப்போது போட்டா போட்டி நடந்து வருகிறது. விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வாரிசு பட விழாவில் தில் ராஜூ, சரத்குமார் போன்ற பிரபலங்கள் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரஜினியின் இடத்துக்கு யார் வருவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அந்த வகையில் ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவருமே தற்போது படங்களை இயக்குவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். ரஜினியின் திரைவாரிசாக எப்போதுமே நான் தான் என்ற மெத்தனத்தில் டாப் நடிகர் ஒருவர் உள்ளார்.

Also Read : பையன் ஒரு மாதிரி, அவன் கூட தங்க வேண்டாம்.. மகளை கூப்பிட்டு கண்டித்த ரஜினி

பொதுவாக ரஜினியுடைய தாக்கம் எல்லா நடிகர்களிடமும் இருக்கும். அவருடைய ஸ்டைல், பேச்சு என பலவற்றையும் டாப் நடிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் தனுசு சமீபத்தில் வாத்தி படவிழாவில் ரஜினி எப்படி நடந்து கொள்வாரோ அதே போல் அச்சு பிசகாமல் நடந்து கொண்டார்.

மேலும் ரஜினி பாணியில் ஒரு குட்டி ஸ்டோரியும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ரஜினி ஸ்டைலாக சொல்லும் கண்ணா போன்ற வார்த்தைகளையும் தனுஷ் பயன்படுத்தியிருந்தார். ரஜினிக்கு மகன் இல்லாததால் தனுஷ் தான் சூப்பர் ஸ்டாரின் அடுத்த வாரிசு என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

Also Read : பிரின்ஸ் தோல்விக்குப்பின் வரிசை கட்டி நிற்கும் சிவகார்த்திக்கேயன் 5 படங்கள்.. ரஜினி ஸ்டைலில் எகிற விட்ட மாவீரன்

ஆனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பம் அவரை வெளியேற்றிய பிறகும் அதிலிருந்த அவரால் மீண்டும் வர முடியும். அதனால் இப்போதும் மேடையில் பேசும்போது ரஜினியின் உடல் மொழி தனுஷுக்கு வந்து விடுகிறது. மேலும் ரஜினியின் படங்கள் ஓடவில்லை என்றாலும் மேடையில் அவர் பேசுவதை ரசிகர்கள் விரும்புவார்கள்.

அதேபோல் தான் வாத்தி பட விழாவிலும் தனுஷின் பேச்சும் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருந்ததாக வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் இடம் தனுஷுக்கு கிடைக்கிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கி உள்ளார்.

Also Read : நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. 175 நாட்கள் ஓடிய ரஜினியின் தரமான 10 படங்கள்

Continue Reading
To Top