Connect with us
Cinemapettai

Cinemapettai

பாகுபலி படத்தை வைத்து நெட்டிசன்கள் செய்யும் சேட்டை பாருங்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி படத்தை வைத்து நெட்டிசன்கள் செய்யும் சேட்டை பாருங்கள்!

பாகுபலி 2 திரைப்படம் வசூல் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பாகுபலி படத்தின் மீதான் மோகம் சற்றும் குறையவில்லை.

பாகுபலி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் அண்மையில் வெளியாக இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள கவனத்தைப் பெற்று பட்டையக்கிளப்புகிறது.
இந்நிலையில், பாகுபலி படத்தின் மீதான மோகம் சினிமா ரசிகர்கள் மத்தியில் சற்றும் குறையவில்லை. ஒரிசாவில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் பிறந்த ஒரு வயதான புலிக்குட்டிக்கு பாகுபலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலைக்கு வந்த மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 2400 பேரில் 1200 பேர் புலிக்குட்டிக்கு பாகுபலி என்று பெயர் சூட்டுவதையே விரும்பியுள்ளனர்.

இதே போல பாகிஸ்தானில் பாகுபலி திரைப்படம் பாபு அலி என்ற பெயரில் வெளியாகும் என்று நெடிட்சன்கள் தங்கள் வேலையைக் காட்டித்தொடங்கியுள்ளனர். மேலும், பாகுபலி படத்தின் மூன்றாவது பாகம் வருமா? என்ற பேச்சும் அடிபடுகிறது.

திருமணத்திற்கு வைத்த பேனரில் மணமக்கள் இருவரையும் பாகுபலி 2 படத்தில் வரும் பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி போல மார்ஃபிங் செய்துள்ளனர். படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் பாகுபலி காய்ச்சல் ரசிகர்களிடமிருந்து குறைந்தபாடில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top