இந்தியாவிலேயே வசூலில் சாதனை படைத்த பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனாலும் பாகுபலி படம் குறித்து பல்வேறு வதந்திகள் வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த படத்தில் சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனுக்கு முன் ஸ்ரீதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அனுஷ்கா கேரக்டரில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் நடிக்க மறுத்ததால் தான் இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், பாகுபலி கேரக்டரில் முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேசப்பட்டதாகவும், அவர் மறுத்துவிட்டதால் தான் பிரபாஸ் ராஜமௌலி தேர்வு செய்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் வில்லனாக நடித்த ராணா. அவர் கூறுகையில் இந்த கதையை எழுதி முடிக்கும் போதே பாகுபலி கேரக்டருக்கு பிரபாஸ் தான் என்று ராஜமௌலி முடிவு செய்துவிட்டார்.

அதனால் தான் தனது தந்தை விஜயேந்திர பிரசாத்திடம் பாகுபலி கேரக்டரை பார்த்து பார்த்து செதுக்குமாறு ராஜமௌலி கூறியிருந்தார் என வில்லனாக நடித்த ராணா வதந்திகளுக்கு முற்றுப்புள்ள வைத்திருக்கிறார்.