Connect with us

Cinemapettai

murugan-news

Tamil Nadu | தமிழ் நாடு

முருகனுடன் தொடர்பில் இருந்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. விசாரணையில் திடீர் திருப்பம்

கடந்த சில நாட்களாக திருச்சியில் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் என்ற திருடனின் வரலாற்றை தோண்டியபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. சினிமாவின் முக்கிய புள்ளிகள் இவனுடன் தொடர்பில் இருப்பது மேலும் மேலும் இந்த வழக்கை விசாரிக்க தூண்டுகிறது. கொள்ளை அடிப்பதே தொழிலாக வைத்துள்ள முருகனின் அன்றாட பழக்கவழக்கங்கள் மது, மாது, சூது தான்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை முருகனும் அவனது கூட்டாளிகளும் திருடிச் சென்றுள்ளனர். அதனை பெரம்பலூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் போலீசார் கைப்பற்றினர். முருகன் பல இடங்களில் கொள்ளையடித்து முன்னதாக தெலுங்கு சினிமா உலகில் ஆத்மா என்பவரை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்து பண பிரச்சினையால் தடைபட்டது.

அந்தப் பண பிரச்சனையை சரிசெய்ய திருச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்து சென்றான். பிறகு மான்ஸா என்ற படத்தை தயாரிக்கும் போது 50 லட்சத்திற்கு கமிட் செய்யப்பட்ட ஹீரோயினுக்கு வெறும் 6 லட்சம் கொடுத்ததால் அந்த படமும் பாதியில் நின்றது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்த முன்னணி நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக புது துப்பு ஒன்று கிடைத்துள்ளது. திருச்சியில் கொள்ளையடித்த பாதி நகைகளை அந்த நடிகையிடம் கொடுத்து புதிய படத்தில் கமிட் செய்ததாகவும் கூறப்படுகிறது. நகை கடை உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்ட முருகன், சம்பளத்துக்கு பதிலாக நகைகளை கொடுத்ததால் கொஞ்சமும் சந்தேகம் அடையாமல் அந்த நாயகி வாங்கி வைத்துக் கொண்டார்.

முருகனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டு உள்ளது. இதனால் இவருடன் தொடர்பு வைத்துக் கொண்ட நடிகைகளுக்கும் அந்த நோய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் போலீசார் அனைத்து வகைகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். வருகின்ற சில நாட்களில் சினிமாவின் மிகப் பெரிய புள்ளிகள் போலீஸாரிடம் மாட்டிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top