Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான்கு வருடங்கள் கழித்து சூர்யாவின் 24 படத்துக்கு வந்த சிக்கல்.. சோதிக்காதிங்கடா!
சூர்யா சமீபகாலமாக நடிக்கும் படங்கள்தான் அவருக்கு சோதனையை தருகிறது என்றால் அவர் நான்கு வருடங்களுக்கு முன்னால் நடித்து வெளியான படமும் சோதனைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களம் இறங்கியிருந்தாலும் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதில் பல கோடி ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார் சூர்யா.
நடிப்பை விட அதிகமாக சமூக அக்கறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மாணவர்களுக்கு அகரம் பவுண்டேஷன், தம்பி கார்த்தி சார்பில் விவசாயிகளுக்கு உழவர் பவுண்டேஷன் என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இருந்தாலும் சமீப காலமாக சூர்யாவின் படங்கள் ரசிகர்களை திருப்தி படுத்துவதில்லை. என்னதான் சூர்யா ரசிகர்கள் படம் சூப்பர்ஹிட், பம்பர் ஹிட் என சொல்லிக்கொண்டாலும் அவர்களுக்கே தெரியும் படம் சரியாக அமையவில்லை என்று.
அப்படி சூர்யாவின் தோல்விப் படங்களில் ஒன்றாக இருந்தது தான் 24. இந்த படத்தில் சூர்யாவின் ஆத்ரேயா கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. கிராபிக்ஸ் காட்சிகள். மியூசிக் என அனைத்திலும் வெற்றி பெற்ற இந்த படம் ஏனோ பலருக்கும் திருப்தி அளிக்கவில்லை.
சமீபத்தில் 24 படத்தை அமேசான் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. ஆனால் அதில் ஆடியோ பிரச்சினைகள் காரணமாக அந்த படத்தை வெளியிட்ட சில நாட்களிலேயே நீக்கிவிட்டனர். மீண்டும் நல்ல இசை தரத்துடன் அந்த படம் வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
