தனுஷ் வழக்கில் அதிரடி திருப்பம்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தனுஷ் வழக்கில் அதிரடி திருப்பம்!

Dhanush

News | செய்திகள்

தனுஷ் வழக்கில் அதிரடி திருப்பம்!

சிவகங்கையைச்சேர்ந்த கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், 16 வயதில் அவர் தங்களை விட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறிக்கொண்டு மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதோடு, அவரது பள்ளி சான்றிதழ்கள் மற்றும் அங்க அடையாளங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் தனுசும் கலந்து கொண்டார்.

பின்னர், அவர்கள் தனுஷின் அங்க அடையாளங்களாக கொடுக்கப்பட்டவை லேசர் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டிருப்பதாகவும், சான்றிதழ்களிலும் குளறுபடிகள் இருப்பதாகவும் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், தனுஷ்தரப்பில் அதிர்ச்சியும், கதிரேசன்தரப்புக்கு சாதகமாகவும் சூழ்நிலை உருவாகியிருந்தது.

இந்நிலையில், சிறுவயதிலேயே ஓடிச்சென்ற தங்களது மகன் திரும்பி வந்து விட்டதாக சிவகங்கை கதிரேசன் தம்பதியினர் தற்போது அந்த பையனுடன் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார்களாம். இதனால் பெரிய சிக்கலில் இருந்து தனுஷ் தப்பி விட்டதாக தெரிகிறது. ஆனபோதும், உண்மையிலேயே அந்த தம்பதிகளின் மகன்தான் திரும்பி வந்திருக்கிறானா? இல்லை ஜோடிக்கப்பட்ட மகனா? என்பது போன்ற கோணத்தில் அடுத்தபடியாக விசாரணை முடுக்கிவிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top