Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல அம்மன் பட வில்லன் பணம் இல்லாமல் அனாதையாக இறந்து கிடந்த கதை..
நடிகை சவுந்தர்யா அப்பாவி பெண் வேடத்திலும், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆக்ரோஷமான வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் அம்மன். அந்த காலத்திலேயே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் பட்டையை கிளப்பிய திரைப்படம். மிகப்பெரும் வெற்றியை பெற்ற இந்த படத்தில் வில்லன் சன்டா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ராமி ரெட்டி.
இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 1959ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஜர்னலிஸம் பேராசிரியராக பணியாற்றி வந்தார். சினிமாவின் மீதுள்ள பற்றினால் அம்மன் படத்தில் நடித்தார். இவரது வில்லன் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டதால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நன்றாக நடித்து பணம், புகழ் என சம்பாதித்துக் கொண்டிருந்த நேரத்தில், படத்தயாரிப்பில் ஆசைப்பட்டு தான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் இழந்தார். மேலும் அதிலிருந்து மீண்டு வராத நிலைமை ஏற்பட்டு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.
பணம் சோதனையிலிருந்து மீளமுடியாத நிலையில் உடல் நிலையும் மிகவும் மோசமாக காணப்பட்டது. கல்லீரல் மற்றும் கிட்னி பெயிலியர் காரணத்தினால் ராம ரெட்டி பரிதாபமாக இறந்தார்.
