புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வாழுங்க, வாழ விடுங்கள்.. நீண்ட நாட்களுக்குப் பின்பு அஜித்குமார் வெளியிட்ட அறிக்கை

அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவு வெற்றி பெறவில்லை. தற்போது அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித்குமார் ரசிகர்களுக்கு எப்போதும் தனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் கூட அஜித் குமார் என்பதை தல என அழைக்க வேண்டாம், ஏகே என அழைத்தால் போதும் என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சமீபகாலமாகவே அஜித்குமார் பெரிய அளவில் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ள விஷயம் வெளியாகியுள்ளது.

அதாவது, பொறந்த அஜித் மாதிரி தான் பொறக்கணும் என சொல்லுவார்கள். உண்மையை சொல்லப்போனால் அஜித்குமார் திரை வாழ்க்கையில் பல கஷ்டங்கள் பட்டுள்ளார். 30 வயதில் நம்மால் எதையும் செய்ய முடியும் தோன்றும். அதே 40 வயதில் நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு, அதுதான் தீர்மானிக்கும் என்று தோணும் எனக் கூறினார்.

மேலும் நான் காலையில் இந்த வீட்டில் கடவுளை வணங்கும்போது தன் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன் எனவும், அவருக்கு நன்றி சொன்னால் மிகையாகாது என கூறினார். யாருக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். 100% உழையுங்கள்.

நான் படிக்காததால் வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன். படித்திருந்தால் ஓரளவிற்கு கஷ்டப்படாமல் இருந்திருப்பேன். அதனால் அனைவரும் படிங்கள் என கூறினார். யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. சிம்பிளாகச் சொன்னால் வாழுங்க வாழ விடுங்கள் என கூறியுள்ளார்.

இதையெல்லாம் தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு அண்ணன் என்கின்ற ஸ்தானத்தில் உரிமையாக பேசியிருக்கிறார். இவர் வெளியிட்டிருக்கும் இந்த வேண்டுகோள் தல அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுப்பது மட்டுமல்லாமல், சோஷியல் மீடியாவில் வைரல் ஆக்கப்படுகிறது.

- Advertisement -

Trending News