சகிலா சொன்ன ஒத்த வார்த்தை, காதும் காதுமாய் கல்யாணத்தை நடத்திய பயில்வான்.. லீக்கான புகைப்படம்

Bailwan Ranganadhan: சினிமா விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், பிரபலமாக வேண்டும் பணமும் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய யூடியூப் சேனல் மூலம் நடிகையின் சொந்த வாழ்க்கையே விமர்சிக்கும் விதமாக பல அந்தரங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார். இதன் மூலம் சர்ச்சையில் சிக்கி பிரபலமாகி தற்போது இவரை தெரியாத ஆளே இல்லை என்பதற்கு ஏற்ப வளர்ந்து விட்டார்.

ஆரம்பத்தில் இவர் சொன்ன விமர்சனங்களை கண்டுகொள்ளாத பலரும் தொடர்ந்து நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இவருடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரேகா நாயர் சட்டையை பிடித்து கேள்வி கேட்டு தோலுரித்தார். இவர் இரவின் நிழல் என்ற படத்தில் நடித்ததை மோசமாக விமர்சித்த பொழுது ஏற்பட்ட சர்ச்சையால் பயில்வான் இடம் மல்லுக்கு போய் விட்டார். இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகி நிலையில் ரேகா நாயரின் துணிச்சலை பலரும் பாராட்டினார்கள்.

மகளை கரை சேர்த்த பயில்வான்

ஆனாலும் இதற்கெல்லாம் அசரமாட்டேன் என்பதற்கு ஏற்ப பயில்வான் தொடர்ந்து பிரபலங்களின் வீட்டில் என்ன நடக்கிறது. எந்த நடிகை எப்படி இருக்கிறார் என்பதை மோசமாக விமர்சிக்கும் விதமாக தொடர்ந்து இந்த செயலை செய்து கொண்டே வருகிறார். இந்த சமயத்தில் தனியார் சேனலில் நடந்த ஒரு இன்டர்வியூல் நடிகை ஷகீலா மற்றும் பயில்வான் இருவரும் கலந்து கொண்டார்கள். அப்பொழுது ஷகீலா, பயில்வானை பார்த்து உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை காதலித்து வருவதாக ஒரே ஒரு வார்த்தை கேட்டார்.

bailwan seeman
bailwan seeman

இதை கேட்டதும் பயில்வான் பொங்கி எழுந்து நாக்கில் நரம்பில்லாமல் பேசாதீங்க. மற்றவர்கள் பொண்ணு என்றால் என்ன வேணாலும் பேசுவீங்களா என்று கொந்தளித்து விட்டார். உடனே சகீலா உங்க பொண்ணு என்றதும் உங்களுக்கு குத்துது குடையுது. மற்றவர்கள் பொண்ணு நடிகைகள் என்று வரும் பொழுது நீங்கள் என்ன வேணாலும் பேசலாம் அதை யாரும் கேட்கக்கூடாது அப்படி தானே என்று சரியான பதிலடி கொடுத்தார்.

bailwan (1)
bailwan (1)

இந்த விவாதம் நடந்த கொஞ்ச நாளிலேயே பயில்வான் அதிரடி முடிவை எடுக்கும் விதமாக யாருக்கும் தெரியாமல் அவருடைய மகளுக்கு உறவுக்கார ஒரு பையனோடு நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி சென்னையில் வைத்து பயில்வான், மகள் கல்யாணத்தை காதும் காதுமாய் நடத்தி வைத்து விட்டார். மகளின் கல்யாண புகைப்படம் ஒரு வாரம் கழித்து தற்போது தான் சமூக வலைதளங்களில் லீக் ஆகி இருக்கிறது.

bailwan daughter marriage
bailwan daughter marriage

சகிலா சொன்ன ஒத்த வார்த்தையே தாங்கிக் கொள்ள முடியாத பயில்வான் மகளை கரை சேர்க்க வேண்டும் என்று பாடுபட்டார். ஆனால் மற்றவர்களை மட்டும் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். மேலும் பயில்வான் மகள் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் யாரும் சொல்லும்படி பெரிசாக கலந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் எந்த முகத்தை வைத்து அவர்களை எல்லாம் பத்திரிக்கை வைத்து அழைக்க முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொருவரையும் பயில்வான் வச்சு செய்திருக்கிறார். இருந்தாலும் பயில்வான் பழக்கத்திற்காக சில பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் யார் என்றால் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கும் சீமான், நடிகர் மற்றும் இயக்குனர் ஆக இருக்கும் பார்த்திபன், மற்றும் சீரியல் நடிகர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

லீலைகளை அவுத்துவிட்ட பயில்வான்

- Advertisement -spot_img

Trending News