வலிமை வில்லனுக்கு அஜித் செய்த உண்மையான ஹீரோயிசம்.. மெய்சிலிர்த்து போன தெலுங்கு தேசம்

வலிமை ஃபீவர் அஜித் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. இந்த மாதம் பொங்கல் வெளியீடாக போனி கபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கிய அஜித்தின் வலிமை படம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெரிய எதிர்பார்ப்புடன் களம் காண்கிறது.

இந்தப் படத்தில் அஜித்திற்கு இணையாக வில்லன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மிரட்டியுள்ளார். வலிமை  படத்தின் டிரைலர் சென்ற வாரம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

அஜித் மாதிரி ஒரு ஸ்மார்ட் ஹீரோவிற்கு ஏற்ற வில்லனாக கார்த்திகேயாவை உருவாக்கி படத்திற்கு மெருகேற்றி இருக்கிறார் எச் வினோத். அஜித்துக்கு இணையாக கார்த்திகேயாவும் பைக் ரேஸில் தெறிக்க விட்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் வில்லனான கார்த்திகேயா பிறந்த ஊர் ஹைதராபாத். வலிமை படம் அங்கேயும் தெலுங்கு மொழியில் ரிலீசாக உள்ளது. அங்கே கார்த்திகேயாவிற்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.

கார்த்திகேயா தெலுங்கு சினிமா துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று அஜித் அவருக்காக ஒரு காரியம் செய்துள்ளார். அங்கே வலிமை படத்தின் போஸ்டரில், கார்த்திகேயாவின் படத்தை பெரிதாக போட்டும், அஜித்தின் படத்தை சிறிதாக போட்டும் வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளாராம்.

Valimai-Telugu-Cinemapettai.j
Valimai-Telugu-Cinemapettai.j

கார்த்திகேயாவின் கேரியர் தெலுங்கு சினிமாவில் வளர வேண்டும். அவர் இந்த படத்தின் மூலம் நிச்சயமாக ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று, இந்த மாதிரி ஒரு செயலை செய்துள்ளார் அஜித். இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்களுக்கு புல்லரித்துப் போய் விட்டதாம்.  உங்கள நாங்க கொண்டாடுதல் எந்த ஒரு தப்பும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்