Tamil Nadu | தமிழ் நாடு
விவசாயி வீட்டில் எலி செய்த நாசவேலை.. எலி கூட விவசாயி வயித்திலதான் அடிக்கும் போல
விவசாயம் செய்பவர்களாக பிறந்து விட்டாலே அவர்களுக்கு வறுமையும் சோகமும் கூடவே பிறந்து விடுகிறது. ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்ற வேளையில், ஒரு விவசாயி சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த பணத்தை ஒரு எலி மொத்தமாக கடித்து குதறிய போது அந்த விவசாயின் மன நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜன். இவரது குடும்பமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. சமீபத்தில்தான் தன் நிலத்தில் அறுவடை செய்துள்ளார்.
அந்த அறுவடைக்கு பின் ரங்கராஜனின் கைக்கு கிடைத்த 50,000 ரூபாயை தனது வீட்டில் பத்திரமாக வைத்திருந்தார். அதே நேரத்தில் அவர்கள் வீட்டில் இருந்த எலி ஒன்று ரங்கராஜன் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கடித்து குதறியது.
இதனை பார்த்த ரங்கராஜன் கண் கலங்கி நின்றார். மேலும் இதனால் அந்த பகுதியில் உள்ள அனைவரது வீட்டிலும் ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர்.
ஏன்டா எலி.. அரசாங்கம் தான் விவசாயி வயிற்றுல அடிக்குதுன்னு பார்த்தா.. நீயுமாடா.!

rat-bites
