கிரிக்கெட் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் டெண்டுல்கரே நடித்துள்ள திரைப்படம் “Sachin: A Billion Dreams”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் மே 26-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் 44-வது பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், அவரது ரசிகர்கள் என வாழ்த்து மழையில் நனைந்தார் சச்சின்.

சச்சின் திரைப்பட த்தின் முதல் பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இது சச்சின் திரைப்படத்தின் முதல் பாடல்; இந்த மண்ணின் தலைசிறந்த மகனுக்கு இதை பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Here’s the 1st song of @SachinTheFilm, my tribute to one of the greatest son of the soil @sachin_rt. Happy Birthday!https://t.co/5dL2b5oylo

— A.R.Rahman (@arrahman) April 24, 2017

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த மண்ணில் பிறந்தது கடவுள் கொடுத்த வரம்; உங்கள் பாடல் கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் இனி ஒலிக்கும் என தெரிவித்துள்ளார்.

We’ve all been blessed by the Almighty to be the sons of India. Thanks for your amazing music which will continue to enthrall a billion ears https://t.co/9G5aZotw1Y

— sachin tendulkar (@sachin_rt) April 24, 2017