ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

அமெரிக்க தேர்தலில் பங்கேற்கும் இசை புயல்.. ஏ.ஆர் ரஹ்மானை நம்பினோர் கைவிட படார்

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. நவம்பர் 5 ஆம் தேதி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் பணியானது நடைபெறும். அனைத்து நாடுகளிலும் தற்போது, இந்தியர்கள் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்காக போட்டி போடுகிறார். தற்போது, பிரச்சாரமும் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக உள்ள ஜோ பைடன் வயது மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தேர்தலில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து, ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மேலும், குடியரசுக் கட்சிசார்பில் முன்னாள் அதிபர், மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர், டொனால்டு ட்ரம்ப், தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். இரண்டு வேட்பாளர்களும் நேரடியாக சந்தித்து விவாதம்நடத்தும் நிகழ்ச்சி கூட சமீபத்தில் நடைபெற்றது. அனல் பறக்க இருவரின் பிரச்சாரமும் நடைபெற்றது.

ஏஆர் ரஹ்மான் பங்கேற்பு

இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலின் வெற்றி தோல்வி இரண்டும், ஏ ஆர் ரஹ்மானுடனும் சம்மந்தப்பட்டுள்ளது. ஆம் அவரும் இந்த தேர்தலில் பங்கேற்கவிருக்கிறார். போட்டியாளராக அல்ல.. இசையமைப்பாளராக.

ஏஏபிஐ தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஏ.ஆர். ரஹ்மானுடன் ஒரு சிறப்பான மாலைப் பொழுதை கண்டுகளிக்க தயாராக இருங்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அறிவித்து இருந்தது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், துணை ஜனாதிபதி கமல் ஹாரிஸுக்கு ஆதரவாக S ஆசியாவில் 30 நிமிடம் பாட இருக்கிறார். இது நவம்பர் 5 மாதம் நடக்க இருக்கும் அமெரிக்க பொதுத் தேர்தலுக்கு உத்வேகமாக இருக்கும் என்றும், இது கமலா ஹாரீஸ் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

0 நிமிட நிகழ்ச்சியில் ரஹ்மானின் பிரபலமான பாடல்கள் மற்றும் கமலா ஹாரிஸின் வரலாற்று வேட்புமனு குறித்த குறும்படமும் இடம் பெற உள்ளது. அதில் ரஹ்மானுடன், இந்தியாஸ்போரா நிறுவனர் எம் ஆர் ரங்கசாமியும் கலந்து கொள்ள இருக்கிறார். இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News