Connect with us
Cinemapettai

Cinemapettai

sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தலைப்பு இதுவா?

மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். அதற்கேற்றார்போல், நடிப்பு, நடனம், சண்டைக் காட்சிகள் என ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை தகுதிகளுடனும் ஒவ்வொரு படத்துக்கும் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார் சிவா. சின்னத்திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தனது பழைய நாட்களையும் மறக்காமல் அசைபோடும் பழக்கம் கொண்ட சிவகார்த்திகேயன், இப்போ ரொம்ப பிஸியான ஹீரோ.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தனது கிராஃபை உயர்த்திய இயக்குநர் பொன்ராமுடன் நல்ல நட்பில் இருக்கும் சிவகார்த்திகேயன், அவரது இயக்கத்திலேயே ரஜினி மூருகன் படத்தில் நடித்தார். கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு களமிறங்கிய பொன்ராம், அந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மார்க்கெட் உண்டு என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். அடுத்தடுத்த படங்களில் பிஸியான சிவா, நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து வேலைக்காரனாக ஜொலித்தார். மோகன் ராஜா இயக்கிய அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க, சிவகார்த்திகேயன் மார்க்கெட் கடகடவென உயர்ந்தது.

தற்போது 3வது முறையாக பொன்ராமுடன் சீமை ராஜாவுக்காக அவர் கைகோர்த்திருக்கிறார். சமந்தா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். கஷ்டப்பட்ட காலங்களில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பது என, தான் கொடுத்த வாக்கை சிவா இந்த படம் மூலம் காப்பாற்றி இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சீமைராஜா, மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் படம் என இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த படத்துக்கு விஞ்ஞானி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top