Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்து த்ரிஷாவை வைத்து இயக்க போகும் தர்பார் படக்குழு..! குதுகலத்தில் ரசிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தர்பார் பட சூட்டிங்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். ஆனால் அவரது துணை இயக்குனருக்கும் உதவி செய்துள்ளாராம் வருகிறார். அதாவது த்ரிஷாவை ஹீரோயினாக வைத்து அவரது உதவியாளர் இயக்கும் புதிய படத்திற்கு கதை திரைக்கதை எழுதி கொடுத்துள்ளார்.
மேலும் எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற படங்களை இயக்கியவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதனையடுத்து நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தை இயக்கியிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தர்பார் படத்தை இயக்கி வருவதால் சரவணனிடம் அந்த கதையை கொடுத்து படத்தை இயக்க சொல்லியிருக்கிறார்.
தற்போது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த தயாரிப்பாளர் வாய்ப்பையும் ஏ.ஆர்.முருகதாஸ் தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என கூறி வருகின்றனர்.
