Tamil Cinema News | சினிமா செய்திகள்
போதும் நீங்க கதை சொன்னது.. முருகதாசை அடித்து துரத்தி தளபதி 65க்கு ஆளை மாற்றிய விஜய்
மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.
அந்தப் படத்தை முருகதாஸ் இயக்க உள்ளார் என பலரும் கூறிய நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் தான் இருக்கிறது.
அதற்கு காரணம் தளபதி விஜய் இடம் கூறிய கதையில் முதல் பாதி அருமையாகவும் இரண்டாம்பாதி சொதப்பலாக இருந்ததால் விஜய் கதையில் மாற்றம் செய்யச்சொல்லி கேட்டாராம்.
முருகதாஸ் மாற்றம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் பழைய கதைகளையே நோண்டி கொண்டிருந்ததால் கடுப்பான விஜய் முருகதாஸ் வேண்டாம் என முடிவெடுத்து தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.
ஆனால் ஒரு சிலரோ முருகதாசுக்கும் சன் பிக்சர்ஸுக்கும் சர்க்கார் படத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் தற்போது அவர் விலக காரணம் என்று கூறுகிறார்கள்.
எது எப்படியோ தளபதி 65 படத்திற்கு முருகதாஸ் இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்தது தளபதி 65 படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

vijay-65-cinemapettai
