A QUIET PLACE

டீஸர், ட்ரைலர் வெளியானதில் இருந்தே அனைவரின் எதிர்பார்ப்பையும் கூடிய படம் தான் இது. இப்படத்தில் கூடுதல் சிறப்பு ஒன்று உள்ளது. இப்படத்தை இயக்கிஉள்ளவர் ஜான் க்ராஸின்ஸ்கி. இவர் தான் படத்தின் ஹீரோ, மற்றும் படத்தில் ஹீரோயின் ரோலில் நடித்திருப்பது இவரின் மனைவி எமிலி பிளான்ட். திரில்லர், ஹாரர் ஜானர் படம் இது. மேலும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே திரையரங்கில் பார்க்க அனுமதி.

படத்தின் கதை

2020 இல் படம் துவங்குகிறது. அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே உயிருடன் உள்ளது. அவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை தாங்கள் வாழும் பகுதிக்கு எடுத்து செல்வது தான் துவக்க ஸீன். உலகில் வேற்றுகிரக மிருகத்தின் ஆதிக்கத்தால், மனிதர்கள் இறந்துவிடுகிறார்கள். எஞ்சியுள்ள சிலர் மட்டுமே உயிர் வாழ்கின்றனர். இந்த வெளியுலக ஜந்துக்களுக்கு கண் தெரியாது, மேலும் அபரிவிதமான கேட்கும் ஆற்றல் உடையவை இவை. சத்தத்தை வைத்து மனித நடமாட்டத்தை அறிந்து அவர்களை கொன்று விடும்.

அதிகம் படித்தவை:  யுவன் ஷங்கர் ராஜா இசையில், விஜய் சேதுபதி பாடும் "பேய் பசி " பட பாடல் .

தன் இளைய மகனை பறிகொடுத்த ஹீரோ, தான், நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். மனைவிக்கு பிரசவம் ஆனதா, பிறந்த குழந்தை பிழைத்ததா, இறுதியில் அந்த வேற்றுகிரக உயிரினத்தை அழிக்கும் வழிமுறையை கண்டுபிடித்தார்களா என்று நகர்கிறது கதை.

a quiet place

மிருகத்திடம் இருந்து தப்ப, சைகை மொழியில் பேசுவது, மண் வைத்து பாதை அமைத்து அதில் சத்தம் இல்லமால் நடப்பது, அங்கு அங்கு கேமரா வைத்து மிருகத்தை கண்காணிப்பது, சிறிய ஓசையை மிருகம் கண்டுபிடிக்காமல் இருக்க பெரிய ஓசையை உருவாக்குவது என்று அசத்தியுள்ளார் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  இளைஞரணி மூலம் தியேட்டர்களை நிரப்பிய வாரிசு!

பிளஸ்

ஷூட்டிங் லொகேஷன், திரைக்கதை, கதாபாத்திரங்களின் தேர்வு , செண்டிமெண்ட்

மைனஸ்

ஸ்லோவான முதல் பாதி, எளிதில் யூகிக்க கூடிய லாஜிக் ,

சினிமாபேட்டை அலசல்

உலகளவில் மாஸ் ஒபெநிங் கொடுத்துள்ளது இப்படம். எனினும் நம் இந்திய ரசிகர்களை கவருவது சற்றே கடினம் ஒன்று தான். படத்தின் ஆரம்ப காட்சிகள் நமக்கு வில்ல ஸ்மித் நடிப்பில் வெளியான ” I AM LEGEND ” படத்தை நினைவு படுத்துகிறது. அதே போல் வீட்டின் பேஸ்மென்ட்டில் தப்பிக்க முயல்வது போன்ற காட்சிகளில் சமீபத்தில் வெளியான ” DONT BREATHE ” பட சாயல் உள்ளது.

A QUIET PLACE = IAM LEGEND + DONT BREATHE

சினிமாபேட்டை வெர்டிக்ட்

ஏ மற்றும் பி சென்டர் ஆடியன்ஸை திருப்தி படுத்தும் வகையில் உள்ளது இப்படம். { வேற படம் இல்ல பாஸ்.}

சினிமாபேட்டை ரேட்டிங் 3 /5