பாகுபலி- 2 படத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் பாகுபலி பற்றி பேச்சை எடுத்தாலே செம கடுப்பாகிறாராம். அவர் வேறு யாருமல்ல…. பாகுபலி- 2 படத்தில் நடித்துள்ள தமன்னாதான்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியதால் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது தமன்னா செம கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாகுபலி முதல் பாகத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் தமன்னா.

 

அதனால் தமன்னாவின் கதாப்பாத்திரம் இரண்டாம் பாகத்திலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது. பாகுபலி இரண்டாம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல தமன்னாவுக்கு அதிர்ச்சி. மிக சில ஷாட்களில் தான் தமன்னாவின் முகம் தெரிந்தது. வசனம் கூட இல்லை.

தமன்னா நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியது இயக்குநர் ராஜமௌலி தான் என்பதை படத்தில் பணிபுரிந்தவர்கள் அவரிடமே சொல்லியுள்ளனர். இதற்கிடையில் பாகுபலி-2 வெளியான பிறகு தமன்னாவை பார்ப்பவர்கள் அனைவரும் ஏன் இரண்டாம் பாகத்தில் உங்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர் என்று கேட்டு கேட்டு அவரது டென்ஷனை அதிமாக்கிவிட்டனர்.