புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்த படத்தை தனியா தியேட்டரில் பார்த்தா 1000 பரிசு அறிவிப்பு.. 90-களில் பெரிய அளவில் திகிலூட்டிய பேய் படம்

Horror Movie: 90-களின் காலகட்டத்தில் இந்த பேய் படத்தை தியேட்டரில் தனியா பார்த்தா ஆயிரம் ரூபாய் பரிசு தரும் அறிவித்து இருக்காங்க. அந்த அளவுக்கு திகில் ஊட்டக்கூடிய படமாக இருந்திருக்கிறது. சின்ன வயதில் ஜகன்மோகினி படம் பார்த்து பயந்திருப்போம்.

ஆனால் இப்போது அந்த படத்தை பார்க்கும்போது வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். ஜகன்மோகினி தொடங்கி இப்போ அரண்மனை வரைக்கும் பேய் படம் என்றாலே ஒரு குதூகலம் தான். படத்தைப் பார்க்க அவ்வளவு பயமாக இருக்கும்.

பெரிய அளவில் திகிலூட்டிய பேய் படம்

காதை மூடிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு ஓரக் கண்ணால் பார்த்த படங்களெல்லாம் கூட இருக்கிறது. அமைதியான ஒரு இருட்டு அதில் திடீர் என ஒரு சத்தம் என்று வந்தாலே நெஞ்சம் படபடக்க ஆரம்பித்து விடும்.

பக்கத்தில் இருப்பவர்களின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு படம் முழுக்க பார்க்க முடிப்போம். ஆனால் ஒரு பெரிய தியேட்டரில் உட்கார்ந்து பேய் படத்தை தனியாக பார்ப்பது என்பதெல்லாம் எப்பேர்பட்ட கொம்பனாலும் முடியாத விஷயம்.

அப்படி அந்த காலகட்டத்தில் அறிவிப்பு கொடுக்கும் அளவுக்கு மிரட்டிய பேய் படம் எது என்று தானே யோசனை வருகிறது. நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான 13 ஆம் நம்பர் வீடு படம் தான் அது. படம் முழுக்க திகில் காட்சிகள் தான் நிறைந்திருக்கும்.

ஜெய்சங்கர், லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்போது கூட இந்த படத்தை தனியாக எல்லாம் உட்கார்ந்து பார்க்க முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மீண்டும் அந்த பழைய நினைவுகளை மீட்டுக் கொள்ள ஒருமுறை இந்த படத்தை வீட்டில் தனியாக பாருங்கள், 13 ஆம் நம்பர் வீடு இன்னும் நம்மளை மிரட்டுகிறதா என பார்க்கலாம்.

- Advertisement -

Trending News