பா ரஞ்சித்தை வச்சு செய்யும் ப்ளூ சட்டை.. கலாய்த்து தள்ளி போட்ட பதிவு

Pa Ranjith: இப்போதுள்ள சினிமா ரசிகர்கள் படத்தை காட்டிலும் சினிமா விமர்சகர்களின் விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் படத்தை பார்க்கிறார்கள். இதில் பலர் படம் வெளியாவதற்கு முன்பே நெகடிவ் விமர்சனத்தை கூறுவதால் படத்தின் வசூலும் பாதிப்பதாக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

இதில் சினிமா விமர்சகர்களில் முக்கியமாக பார்க்கப்படுவது ப்ளூ சட்டை மாறன். இவர் யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து வரும் நிலையில் இப்போது பா ரஞ்சித்தை வறுத்து எடுக்கும்படி பதிவு போட்டு இருக்கிறார். அதாவது சமீபத்தில் மாரி செல்வராஜின் வாழை படம் வெளியாகி இருக்கிறது.

blue-sattai-maran
blue-sattai-maran

இந்தப் படத்தின் விழா ஒன்றில் பா ரஞ்சித் பேசிய போது மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் பிடித்த அளவுக்கு கர்ணன் மற்றும் மாமன்னன் படம் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் கதாநாயகன் திருப்பி அடிப்பது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பேசினார்.

பா ரஞ்சித்தை விமர்சித்து ப்ளூ சட்டை போட்ட பதிவு

இதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் கர்ணன் மற்றும் மாமன்னன் பட கதாநாயகர்களை விட ஆக்ரோஷமாக சார்பட்டா பரம்பரை படத்தில் ஹீரோ ஆர்யா ஆக்ரோஷமாக திருப்பி அடிச்சார். அது மறந்து போச்சா பா ரஞ்சித் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

pa-ranjith-blue-sattai
pa-ranjith-blue-sattai

அதோடு பா ரஞ்சித்தை கலாய்க்கும் விதமாக அடுத்த அடுத்த பதிவும் போட்டிருக்கிறார். அதாவது சார்பட்டா பரம்பரை படம் பாக்சிங் படம் என்பதால் சண்டை போட்டு தான் ஆக வேண்டும், அதில் எந்த அரசியலும் இல்லை என்று முட்டு பாய்ஸ் சொல்கிறார்கள்.

ஆனால் ஆர்யா சண்டை போடுறது எந்த அணிக்கு எதிரா என்ற கேள்வியை ப்ளூ சட்டை எழுப்பி இருக்கிறார். இது போன்ற தொடர்ந்து ரஞ்சித்தை சீண்டும்படியாக ப்ளூ சட்டை போடும் பதிவுக்கு ட்விட்டரில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

ரஞ்சித்துக்கு எதிராக வரும் கருத்து

Next Story

- Advertisement -