டாப் ஸ்டார் படத்தில் கேமியோவாக ரஜினி நடிப்பாரா.? நக்கல் அடித்த ப்ளூ சட்டை

Rajini : இப்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் மல்டி ஸ்டார் படமாக உருவாகிறது. அதுவும் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் மற்ற மொழிகளில் டாப் ஸ்டாராக இருக்கும் நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஜெயிலர், லியோ என தொடர்ச்சியாக இதை பார்க்க முடிகிறது.

இந்த சூழலில் தொடர்ந்து ரஜினி வம்பு இழுக்கும்படி பதிவு போட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் இப்போதும் நக்கல் அடித்து ட்வீட் செய்துள்ளார். அதாவது ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரீப் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர்.

அதேபோல் அடுத்ததாக ரஜினி நடிப்பில் வர இருக்கும் வேட்டையன் மற்றும் கூலி படங்களில் பகத் பாசில், நாகர்ஜுன் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா போன்ற நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இவர்களெல்லாம் ரஜினியிடம் கேட்பது போல ஒரு வேடிக்கையான பதிவை ப்ளூ சட்டை போட்டிருக்கிறார்.

ரஜினியை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு

blue-sattai-maran
blue-sattai-maran

அதாவது நாங்க உங்க படத்துல கேமியோ ரோல் பண்ண மாதிரி நீங்கலும் எங்க படத்துல நடிக்கணும். இதுக்கு டெய்லி சம்பளம் பேசிக்கலாமா, இல்லேன்னா மொத்தமா பேசிக்கலாமா என்று கேட்கிறார்கள். அதுக்கு என்னடா பேசுகிறது? இப்ப என் ரேஞ்சுக்கு கேமியோ பண்ண முடியுமா? டூ ஸ்டெப்ஸ் பேக் என்று ரஜினி கூறுவது போல கிண்டலடித்துள்ளார்.

லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் தான் நடித்திருந்தார். ஆனால் அவர் 40 நிமிடங்களுக்கு மேல் வருவதால் கேமியோ இல்லை என்றும் தனது மகள் ஐஸ்வர்யாவின் படம் என்பதால் ரஜினி நடிக்க சம்மதித்தார் என்று ப்ளூ சட்டை கூறியிருக்கிறார்.

பெரும்பாலும் இப்போது படங்கள் பான் இந்திய மொழிகளில் வெளியாகுவதால் அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளுவதற்காக அங்கு பிரபலமான நடிகர்களை தமிழ் படங்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இது ஒரு வகையில் வசூலுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறது.

வேட்டையனாக வலம் வரும் ரஜினி

Next Story

- Advertisement -