Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எல்கேஜி கட்சியில் முக்கிய பதவியை பெற்ற பிரபல அரசியல் பிரமுகம்

அரசியல்வாதியாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருக்கும் படத்தில் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமூக பிரச்சனைகளில் முதல் ஆளாக களமிறங்கும் ஆர்.ஜே.பாலாஜி. தற்போது கோலிவுட்டில் காமெடி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது கிரிக்கெட் கமெண்ட்ரி பணியை ராஜினாமா செய்தார். இதே நேரத்தில், இளைஞர்களை வழிநடத்த அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்பதாக எழுதப்பட்டு இருந்த சுவர் விளம்பரம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து, அந்த விளம்பரத்தில் இடம்பெற்று இருந்த கட்சி கொடியை ஆர்.ஜே.பாலாஜி டுவிட்டரில் வெளியிட்டு மேலும் பரபரப்பை கூட்டினார். அட கமல், ரஜினி பாணியில் ஆர்.ஜே.பாலாஜியும் அரசியலுக்கு வருகிறாரோ என ஒரு தரப்பு கிசுகிசுக்க தொடங்கினார்.

இதெல்லாம், ஒரு விளம்பரம் தான்ப்பா. புதுப்படத்தின் விளம்பரம் தான் என கோலிவுட்டில் பேச்சுகளும் அடிப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அவரின் கட்சி அறிவிப்பு வெளியாகியது. அப்பதிவில், ஆம் நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் மூலமாக எனக் குறிப்பிட்டு இருந்தார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வெற்றி பெற்ற பாலாஜி முதல் முறையாக நடிகராக அறிமுகமாகும் இப்படத்திற்கு எல்.கே.ஜி எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. படத்தின் மகளிரணி தலைவியாக நடிகை ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். படத்திற்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்காக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அணிந்திருந்த மோதிரத்தில் நாஞ்சில் சம்பத்தின் புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது. இதை தொடர்ந்து, படத்தில் அவர் ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நடித்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாலாஜியுடன் இணைந்து புது பயணத்தை தொடங்க இருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியலில் வெற்றி கண்ட சம்பத், நடிப்பில் புது அவதாரம் எடுக்கலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top