கமல், சிம்புவை நம்பி மோசம் போன சூப்பர் ஹிட் பட இயக்குனர்.. பில்டப் கொடுத்து சாய்ச்சுபுட்டாங்களே பாஸ்!

Kamal – Simbu: முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஒருவரை கமல் மற்றும் சிம்பு வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் அவலம் நடந்திருக்கிறது. இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் முதல் படம் ஹிட் படமாக அமைந்துவிட்டால் அவர்களுடைய வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இப்போது இருக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் லிஸ்டில் சேர்ந்திருக்க வேண்டிய இயக்குனர் ஒருவர் கமல் மற்றும் சிம்புவால் மோசம் போயிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அந்த இயக்குனர்.

முதல் படத்திலேயே மலையாள உலகின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் துல்கர் சல்மானை நடிக்க வைத்திருந்தார். இது இவருக்கு பெரிய பாசிட்டிவ் ஆகவும் அமைந்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கிலும் படம் பட்டையை கிளப்பியது. எட்டு கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், 20 கோடி வசூலித்தது. அதன் பின்னர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, அந்த படத்தில் நடித்த நடிகை நிரஞ்சினியை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணமான கையோடு தேசிங்கு பெரியசாமியின் படத்தை கமலஹாசன் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிறது. இந்த படம் வரலாற்று கதையை மையமாகக் கொண்டது எனவும், நீளமான முடி எல்லாம் வைத்திருக்கிறார் எனவும் ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டது.

பில்டப் கொடுத்து சாய்ச்சுபுட்டாங்களே!

ஆனால் படப்பிடிப்பு இதுவரை நடந்த பாடில்லை. கமலஹாசன் தக் லைஃப் படத்தில் பிசியாக இருக்கிறார். சிம்புவும் மலையாளத்தில் 2018 படத்தை இயக்கிய இயக்குனருடன் கைகோர்த்து அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். மொத்தத்தில் இவர்களை நம்பி மோசம் போனது என்னவோ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான்.

கமலஹாசன் இந்த படத்தை கைவிட்டு விட்டதாகவும், சிம்பு வேறொரு தயாரிப்பாளரை வைத்தே இந்த படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றியும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

கமலஹாசன் OTT பிசினஸை நம்பித்தான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க முன் வந்தது. STR 48 அறிவிப்பு வெளியாகும் பொழுது சிம்புவுக்கு OTT தளங்களில் அதிகம் லாபம் கொடுக்கும் ஹீரோவாக பெயர் இருந்தது. ஆனால் கொஞ்ச நாளிலேயே சிம்புவை நம்பி அவ்வளவு பணம் போட்டால், OTT வியாபாரத்தில் தலை தப்புமா என்ற சந்தேகம் எழுந்ததும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்கு முட்டுக்கட்டையானதாக சொல்லப்படுகிறது.

Next Story

- Advertisement -