Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-viswasam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேரளாவிலும் கொடியை நாட்டும் தல.. அஜித் பாடலை வாசித்துக் காட்டிய போலீஸ்காரர்

விஸ்வாசம் படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் தன்னுடைய கொடியை நாட்டி உள்ளார் தல அஜித். விவேகம் படத்தின் தோல்விக்கு பிறகு எப்படியாவது பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என சிறுத்தை சிவா மற்றும் தல அஜித் இருவரும் இணைந்து உருவாக்கிய படம்தான் விஸ்வாசம்.

தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையும் பெற்றது விஸ்வாசம். விஸ்வாசம் படத்தின் முக்கியமான வெற்றிக்கு இமானின் இசை ஒரு காரணம் என்றால் மிகையாகாது. கண்ணான கண்ணே பாடல் உலகம் முழுவதும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று கொடுத்தது.

அந்தவகையில் கேரளாவில் ஒரு நிலையான ரசிகர் பட்டாளம் இல்லாமலிருந்த தல அஜித்துக்கு விஸ்வாசம் படம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளன. காவல்துறையினர் ஒருவர் தல அஜித்தின் கண்ணான கண்ணே பாடலை கிட்டார் மூலம் வாசித்துக் காட்டி தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது தல ரசிகர்கள் வேற லெவலில் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது தல அஜித் எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top