புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

Seeman : விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் விஜய் தனது முதல் மாநாட்டில் பேசியபோது திராவிடம், தேசியம் இரண்டும் ஒன்று என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. விஜய்யை விமர்சிக்கும்படி சீமான் தரைக்குறைவாக பேச ஆரம்பித்தார். உலக மக்களை விஜய் இணைகிறார் என்றால் உலக வெற்றிக் கழகம் என்று வைக்க வேண்டியது தானே. எதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்று வைத்துள்ளார் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரை விட விஜய் என்ன பெரிய தலைவரா என்றும் சீமானின் பேச்சு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் திமுகவுக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கும் போது எல்லோரும் அவரை வரவேற்றனர்.

விஜய்க்கு எதிராக சீமான் போடும் திட்டம்

திமுக ஒரு வளர்ந்த கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் சீமான் இவ்வாறு விமர்சிப்பது பலருக்கும் நம்பிக்கை இழக்க செய்கிறது. ஆனாலும் விஜய் சீமானின் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை அஜித்தை கண்டுகொள்ளாத சீமான் திடீரென அவருக்கு வாழ்த்து சொல்வது அஜித்தின் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்கான வழியாகத்தான் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்தவுடன் பல கட்சிகள் இதேதான் செய்து வருகிறார்கள்.

ஏனென்றால் விஜய்யின் ரசிகர்கள் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு தான் வாக்களிப்பார்கள். இதனால் இப்போது அஜித் ரசிகர்களை கவரும் நோக்கில் மாற்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இருப்பதாக அந்தணன் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

Trending News