Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் குடும்பம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. பரம்பரை நிலத்தை கொடுத்த கடனுக்காக எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என மூக்கையினை, சுயம்புலிங்கம் கொம்பு சீவி விட்டு இருக்கிறான்.
நாலு நாளைக்குள் பணத்தை கொடுக்கவில்லை என்றால் இடத்தை என் பேரில் எழுதி வைத்துவிடுங்கள் என்று மூக்கையன் மிரட்டி விட்டு போய்விடுகிறான். ஆனந்தியின் அப்பா அழகப்பன் இந்த விஷயம் ஆனந்திக்கே தெரியக்கூடாது என நினைக்கிறார்.
ஆனால் ஆனந்தியின் அக்கா நிலைமை கைமீறி போக ஆனந்திக்கு போன் அடித்து சொல்லி விடுகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தியை பார்த்து அன்புக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நேரடியாக அவன் அம்மாவிடம் சென்று உங்களிடம் இருக்கும் நகை அல்லது வீட்டு பத்திரத்தை கொடுங்கள்.
அதை வைத்து நான் பத்து லட்சம் வாங்க போகிறேன் என்று சொல்கிறான். இது அன்புவின் அம்மாவுக்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது. அந்த பொண்ணுக்காக நீ இந்த அளவுக்கு வந்து விட்டாயா, எங்கேயாவது கடன் வாங்கிட்டு வந்து கடன்காரனாக நின்றன்னா என்ன உயிரோடவே பார்க்க முடியாது என மிரட்டுகிறார்.
10 லட்சத்தை கொடுத்து நிலத்தை காப்பாற்றிய அந்த நபர்
வார்டனின் பேச்சை கேட்டு ஆனந்தி இரவு நேரத்தில் மகேஷ் வீட்டிற்கு காசு கேட்கப் போகிறாள். ஆனந்தி பணம் வாங்க வருவதை முன்னாடியே போன் பண்ணி மித்ரா மகேஷ் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விடுகிறார்.
இதனால் ஆனந்தியை பார்த்ததும் மகேஷின் அம்மா அவளை பணம் வாங்க மகேஷிடம் போக முடியாத அளவு தடுத்து விடுகிறார். அதே நேரத்தில் அங்கு வந்த மகேஷின் அப்பா இனி நீ என் பையனிடம் நெருங்கி பழகக் கூடாது என சொல்லி அனுப்புகிறார்.
எந்த வகையிலுமே 10 லட்சம் புரட்ட முடியாது என தெரிந்த ஆனந்தி ரொம்பவே நொந்து போய் இருக்கிறாள். எப்படியும் மகேஷ் தான் இந்த காசை ரெடி பண்ணி கொடுக்கப் போகிறான். அதை தொடர்ந்து தன்னுடைய காதலையும் சொல்லப் போகிறான் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பம் ஒன்றை இயக்குனர் ஏற்படுத்தி இருக்கிறார். ஆனந்திக்கு 10 லட்சத்தை கொடுக்கப் போவது மகேசும் கிடையாது, அன்பும் கிடையாது. அவளுடைய அண்ணன் வேலு தான். வேலு தன்னுடைய வீட்டு நகையை அவனுடைய மனைவி வாணியிடம் கொடுத்து வைத்திருந்தான்.
ஏற்கனவே தன் குடும்பம் கஷ்டப்படுவதை வாணிக்கு எடுத்துரைத்து அந்த நகையை கேட்டான். ஆனால் அவள் இந்த நகை மட்டும் என்னிடமிருந்து கை மீறினால் நான் செத்து விடுவேன் என்று மிரட்டி விட்டாள். தற்போது அதே நகையை வாணி எடுத்துக் கொடுத்து, நகையை அடகு வைத்து நீ துபாய்க்கு போறதுக்கு பணத்தை ரெடி பண்ணு என்று சொல்கிறாள்.
நகையோடு வரும் வேலுவை ஒரு சிலர் வழிமறித்து அந்தப் பையை பிடுங்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அந்த இடத்திற்கு வரும் ஆனந்தி அவர்களை அடித்து விரட்டுகிறாள். பையை கையில் எடுத்தவாறு யாருடைய பை இது என சுற்றும் மற்றும் பார்ப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
எப்படியும் வேலு இந்த நகை தன் தங்கையிடம் இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவான். ஒன்று நேரடியாக வந்து இது நம்ம வீட்டு நகை தான் வச்சுக்கோ என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இல்லை என்றால் ஆனந்தி அந்த பையை எடுத்துட்டு போகும்போது மறைமுகமாக எப்படியாவது அதை தெரியப்படுத்துவான். எது எப்படியோ இந்த நகையை விற்கும் காசு தான் ஆனந்தியின் குடும்ப பிரச்சனையை தீர்க்க இருக்கிறது.
சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்
- ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு ஸ்கெட்ச் போட்ட மித்ரா
- நேருக்கு நேர் மோதும் அன்பு, மகேஷ்
- முக்கிய முடிவெடுக்கும் தருவாயில் ஆனந்தி