விஜய் சேதுபதி தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகர் ஆவார் இவர் நடித்த விக்ரம் வேதா படம் திரைக்குவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது அதே போல் வசூல் அள்ளியது அனைவரும் அறிந்ததே, விஜய் சேதுபதி ஹிட் படங்கள் அதிகம் கொடுத்துவருகிறார்.

இயக்குனர் சிவம் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘எடக்கு’. இந்தப் படத்தை நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரித்திருக்கிறார்.vijaysethupathi

இந்தப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் கூறுகையில், நடிகர் விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும் என்றும், இப்படத்தின் திரைக்கதையும் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இப்படம், ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சேலம், தர்மபுரி, பெங்களூரு ஹைவேக்களிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நடைபெற்று வருவதாகவும், படம் விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.