Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலுக்காக மிரட்டலான கதை தயார்.. காத்துக்கொண்டிருக்கும் சேரன்.. சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்
உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான கலைஞன். 80களில் ரஜினி படங்களையே தூக்கி சாப்பிட்ட மகத்துவமிக்க போராளி.
சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த கமலஹாசன் அரசியலில் இறங்கி, அதன் முதல் படியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில்தான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் ஒருவராக சேரன் பங்கேற்றிருந்தார். சுமார் 90 நாட்களுக்கும் மேல் தாக்கு பிடித்த சேரன் மக்களால் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் இயக்குவதாக அறிவித்திருந்தார்.
கமலஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தேவர் மகன். இன்றும் தொலைக்காட்சிகளில் இந்த படத்தை பார்க்கும் போது அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருக்கும்.
இந்த தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை சேரன் தயார் செய்து இருப்பதாகவும், விரைவில் கமல்ஹாசனை சந்தித்து கதைசொல்ல இருப்பதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
