பிரபல இளம் வீரர் கிரிக்கெட்டில் வெறும் 28 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அதுகுறித்து, இப்பதிவில் பார்க்கலாம்.
கிரிக்கெட்டில் எப்போதோ படைக்கப்பட்ட ஒரு சாதனையை முறியடிக்க மற்றொரு வீரர் வந்துதான் ஆவார். அது பவுலிங்காக இருந்தாலும் சரி, பேட்டிங்காக இருந்தாலும் சரி. அந்த வகையில் டி2ஒ கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் உர்வில் படேல் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
சையது முகமது முஸ்டாக் அலி டி-20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 28 ஆம் தேதி இந்தூரில் நடந்தது. இதில், குஜராத் – திரிபுரா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 155 ரன்கள் மட்டும்தான் எடுத்தது.
இந்த அணியின் சார்பில், ஸ்ரீதம் பால் 57 ரன்னும், ஸ்ரீனிவாஸ் 29 ரன்னும் எடுதனர். குஜராத் அணி சார்பில், நாக்வஸ்வாலா 3 விக்கெட்டும், சிந்தன் கஜா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
T-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த உர்வில் படேல்!
இதைத்தொடர்ந்து, 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேனாக உர்வின் படேல் களமிறங்கினார். வெறும் 102 ஓவர்களில் அந்த அணி சூப்பர் வெற்றி பெற்றது. இதற்கு முழு காரணம் 26 வயதான உர்வில் படேல்தான்.
உர்வின் படேல் 28 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடித்து சதம் விளாசினார். இதன் மூலம் டி 20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு, சையது முஸ்டாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த் 32 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதை முறியடித்து உர்வில் படேல் சாதனை படைத்துள்ளார்.
இளம் வயதில் உள்ளூர் போட்டியில் அதிரடியாக விளையாடிய இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அப்படியே இந்திய அணியிடம் இடம் பிடித்து, எதிர்காலத்தில், தோனி மாதிரி அவர் உயரவும் வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மேலும், டி 20 கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதமடித்த வீரர்களின் வரிசையில் எஸ்டோனியாவின் சாஹில் சவுஹான் கடந்த ஜூன் மாதம் சைப்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்தில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து, உர்வில் படேல் 2 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.