fbpx
Connect with us

நச்சுனு மொட்டை தலையில் முத்தமிடும் சாக்ஷி புகைப்படம்.. யார் அந்த சிஎஸ்கே அணியின் அதிர்ஷ்டசாலி.?

dhoni-shakshi

Sports | விளையாட்டு

நச்சுனு மொட்டை தலையில் முத்தமிடும் சாக்ஷி புகைப்படம்.. யார் அந்த சிஎஸ்கே அணியின் அதிர்ஷ்டசாலி.?

ஐபிஎல் 2020 இல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மோனு குமார் சி.எஸ்.கே அணியில் புதுமுகமாக அறிமுகமாகி உள்ளார்.

தோனி விளையாடும் அனைத்து போட்டிக்கும் உடன் செல்வார். அவரது மகள் ஷிவா தோனியை இவர் தூக்கி கொண்டு வருவார். தோனி குடும்பத்துடன் நெருங்கிய நண்பராக மோனு குமார் உள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிரான சமிபத்தில் நடத்த போட்டியில் சர்துல் தாகூருக்கு பதிலாக மோனு குமார் சி.எஸ்.கே அணியில் புதிதாக இடம் பெற்றிருந்தார். இவர் அணியில் இடம் பெற்றதை தொடர்ந்து சாக்ஷி தோனி இவருக்கு அன்பாக தலையில் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை பூர்வீகமாக கொண்டவர் இந்த மோனு குமார். 2014 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார்.

2014 U19 உலகக்கோப்பையில் மோனு குமார் உடன் ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான் விளையாடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கிரிக்கெட்டில் தங்களது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள நிலையில் மோனு குமார் மீண்டும் கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளார்.

கடந்த போட்டியில் 2 ஓவர்கள் வீசிய மோனு குமார் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 20 ரன்கள் கொடுத்துள்ளார். இவர் அணியில் இடம் பெற்றதை தொடர்ந்து சாக்ஷி தோனி இவருக்கு அன்பாக தலையில் முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

shakshi-dhoni

shakshi-dhoni

Continue Reading
To Top