விஜயகாந்தின் தம்பி படம் என கிளம்பிய புரளி.. ஈ ஒட்டிய தியேட்டர்களுக்கு கூட்டம் கூட்டமாக குவிந்த ரசிகர்கள்

Captain Vijayakanth- Murali: கேப்டன் விஜயகாந்த் தற்போது சினிமா மற்றும் அரசியலில் ஆக்டிவாக இல்லை என்றாலும் அவர் மீதான மரியாதை என்பது தமிழ் சினிமா கலைஞர்களுக்கு இன்று வரை அதிகமாகவே இருக்கிறது. அவரால் பயனடைந்தவர்கள் என்பதை தாண்டி அவரை ரசித்த அவருடைய ரசிகர்களும் இன்று வரை கேப்டன் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் அவர் ஆக்டிவாக இருந்த காலத்தில் செய்த பல நன்மைகள் தான்.

இப்படியும் ஒரு நடிகருக்கு ரசிகர்கள் இருப்பார்களா என்று ஆச்சரியப்பட வைத்த சினிமா ரசிகர்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் தான். அவருடைய ஒவ்வொரு படத்தையும் கொண்டாடி தீர்த்தார்கள். தளபதி விஜய் கூட விஜயகாந்தின் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்தது.

Also Read:மூன்று நடிகைகளை காதலித்த விஜயகாந்த்.. இதில் 2 பேருக்கு சொந்தமாக வீடு வாங்கி கொடுத்திருக்கிறாராமே!

இப்படி கேப்டனால் நன்மையடைந்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் முரளி. இவர் ஆரம்ப காலத்தில் என் ஆசை மச்சான் என்னும் திரைப்படத்தில் விஜயகாந்த்திற்கு தம்பியாக நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. விஜயகாந்த் உடன் நடித்த பிறகு முரளிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்படி உடனடித்தவர்கள் பயன் பெற்றதோடு திடீரென கிளம்பிய புரளியால் சூப்பர் ஹிட் அடித்த படமும் இருக்கிறது.

1984 ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் முரளி. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இருந்தாலும் படத்தை பார்ப்பதற்கு ரிலீஸ் ஆன இரண்டு நாட்களாக தியேட்டரில் எந்த கூட்டமும் வரவில்லையாம். கிட்டத்தட்ட பூவிலங்கு ரிலீசான தியேட்டர்கள் அத்தனையுமே ஈ ஓட்டி கொண்டிருந்திருக்கிறது.

Also Read:விஜயகாந்த் மிஸ் செய்த 2 படங்கள்.. லேடி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட முடியாத கேப்டன்

அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ நடிகர் விஜயகாந்தின் தம்பி என்று திடீரென ஒரு புரளி கிளம்பி இருக்கிறது. இப்போது போன்று அந்த காலத்தில் தொழில்நுட்ப வசதி இல்லாததால் இந்த புரளி அப்படியே நம்பப்பட்டு விட்டதாம். சினிமா ரசிகர்களும் விஜயகாந்தின் தம்பி எப்படி தான் இருக்கிறார், எப்படி நடிக்கிறார் என்பதை பார்ப்பதற்கே கூட்டம் கூட்டமாக பூவிலங்கு படத்தை பார்க்க சென்று இருக்கிறார்கள். இந்த படமும் ஹிட் அடித்து விட்டது.

விஜயகாந்தின் தம்பி என்று சொல்லப்பட்ட புரளிக்காகவே படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக செல்லும் அளவிற்கு கேப்டனுக்கு செல்வாக்கு இருந்திருக்கிறது. பல வருடங்கள் கழித்து நடிகர் முரளியிடம் ஒரு பேட்டியில் இதை பற்றி கேட்ட பொழுது அவரைப் போன்று சாயல் எனக்கு இருந்ததால் அப்போது நிறைய பேர் என்னை விஜய்காந்தின் தம்பியாகவே நினைத்துக் கொண்டார்கள் என்று அவரே சொல்லி இருக்கிறார்.

Also Read:எங்கு போனாலும் கேப்டனின் பேச்சு தான்.. ஹிந்தி நடிகருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த விஜயகாந்த்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்