Videos | வீடியோக்கள்
100 கோடி மனுஷனுக்கு ஆயிரம் கோடி ஆசை.. குடும்பத்திற்காக மிருகமாக மாறும் சசிகுமார் பட டிரைலர்

சமீபகாலமாக சசிகுமாரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாத நிலையில் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று யோசித்து ஒரு வலுவான கதையை தேர்ந்தெடுத்த சசிகுமார் நடித்துள்ளார். நானே மிருகமாய் மாற என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
சத்திய சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். டி டி ராஜாவின் செந்தூர் பிலிம் இன்று நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது.
Also Read :கழுத்தை நெறிக்கும் கடன்.. அதல பாதாளத்தில் தவிக்கும் சசிகுமார்
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது எல்லோர் போலும் சாதாரணமான மனிதனாக வாழ நினைக்கும் ஒரு இளைஞனின் வாழ்வியலில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் அவன் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே நான் மிருகமாய் மாற.
இந்த தலைப்புக்கு ஏற்றார் போல் கதையை இயக்குனர் கொண்டு சென்றுள்ளார். இந்த படத்தில் வில்லனாக விக்ராந்த் நடித்துள்ளார். மேலும் படம் முழுக்க ரத்தம் கரை என சண்டைக் காட்சிகளாகவே அதிகம் படமாக்கப்பட்டுள்ளது.
Also Read :சூழ்நிலை கைதியான சசிகுமார்.. உச்சகட்ட விரக்தியில் படும்பாடு
ஆசையே அழிவுக்கான வழி என்பது போல ஒரு கோடி மனிஷனுக்கு ஆயிரம் கோடி ஆசை என சசிகுமார் வசனம் பேசி உள்ளார். ஒருவரின் ஆசையால் எவ்வாறு பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை இப்படம் தெளிவுபடுத்தும். மேலும் இப்படம் தனது குடும்பத்தைக் காக்க மிருகமாக மாறி உள்ளார் சசிகுமார்.
இதுவரை சசிகுமாரின் திரை வாழ்க்கையில் இப்படி ஒரு படத்தில் அவர் நடித்ததில்லை. கண்டிப்பாக இந்த படம் சசிகுமாருக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் நானே மிருகமாய் மாற டிரைலர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே டிரெண்டாகி உள்ளது.
Also Read :பாரதிராஜா, பாலாவை ஓரங்கட்டி களமிறங்கிய சசிகுமார்.. 12 வருடங்களுக்குப் பிறகு இயக்குனராக ரீ என்ட்ரி
