Connect with us

Cinemapettai

17 பேரை காவு வாங்கிய 20 அடி தீண்டாமை சுவர்.. மேட்டுப்பாளையத்தில் சாதி வெறியால் செத்துப் போன மனிதாபிமானம்

theendamai

Tamil Nadu | தமிழ் நாடு

17 பேரை காவு வாங்கிய 20 அடி தீண்டாமை சுவர்.. மேட்டுப்பாளையத்தில் சாதி வெறியால் செத்துப் போன மனிதாபிமானம்

சமீபத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய். ஏழைகளை பாவிகளாக நினைத்த பணக்கார வர்க்கத்தின் சூழ்ச்சியால் அந்த 17 பேரும் வீழ்ந்தது தான் உண்மை.

தமிழகமெங்கும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுவது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போன்றவை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மேட்டுப்பாளையத்தில் பணக்காரர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட சுற்றுச்சுவர் ஏழை மக்கள் 17 பேரை காவு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம். மேட்டுப்பாளையத்தில் உள்ள சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் ஒருவர் ஏழை தலித் மக்களின் பார்வையும், நடமாட்டமும் தன் கண்ணில் படக்கூடாது என்பதற்காக சுமார் 20 அடி உயரத்தில் தடுப்புச் சுவர் எழுப்பி உள்ளார். அந்த 20 அடி கருங்கல் சுவர் கட்டுமானத்திற்கு உரித்தான சைடு பீம் போடாமலும், தூண்கள் எழுப்பாமலும் கட்டப்பட்டவை ஆகும்.

இதனை காசு வாங்கிக்கொண்டு கண்டுக்காமல் நகராட்சி ஊழியர்கள் விட்டது பெரும் அட்டூழியம் ஆகும். சிறிது நாட்களுக்கு முன்பு இதேபோல் திருப்பூரில் 20 அடி சுவர் ஒன்று எந்த சப்போர்ட்டும் இல்லாமல் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்து பல உயிர்களை காவு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சாதிவெறியும், பணக்கார வர்க்கமும் சேர்ந்து நின்று 17 உயிர்களை காவு வாங்கியுள்ளது. எப்போதுமே இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருப்பது அரசும் அரசு சார்ந்த பணியாளர்களுமே.

இதற்கு துணையாய் நின்ற அரசு அதிகாரிகளையும், துகில் மாளிகையை உரிமையாளரையும் கைது செய்து எஸ் எஸ் டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மேல் வழக்கு தொடர வேண்டும். மேலும் இறந்த 17 பேரின் குடும்பத்திற்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும். ஆனால் இவற்றில் ஒன்றுகூட நடக்க வாய்ப்பே இல்லை.

நாடே சுடுகாடானாலும் அதை நம் அரசியல்வாதிகள் எப்போதுமே கண்டுகொள்ளப் போவதில்லை.

mettupalayam-news

mettupalayam-news

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top