Home Tamil Movie News ரோகிணி தப்பிக்க முத்துவை சிக்க வைத்த லோக்கல் ரவுடி.. மீனா விஷயத்தில் விஜயாவுக்கு சாதகமாக அமைந்த...

ரோகிணி தப்பிக்க முத்துவை சிக்க வைத்த லோக்கல் ரவுடி.. மீனா விஷயத்தில் விஜயாவுக்கு சாதகமாக அமைந்த முடிவு

sirakadikkum asai (50)
sirakadikkum asai (50)

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி எல்லோரிடமும் அவமானப்பட்டு கையும் களவுமாக சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டால் அப்படியே தலைகீழாக கதை மாறிவிட்டது. அதாவது முத்து மீனாவுக்கு பிரச்சனை வரும் அளவிற்கு ரோகிணி தில்லாலங்கடி வேலையை பார்க்கப் போகிறார். தான் தப்பிப்பதற்காக மற்றவர்களை பலியாடாக ஆக்குவதற்கு ரோகிணி முடிவு எடுத்து விட்டார்.

அந்த வகையில் ரோகிணியை பிளாக் மெயில் பண்ணும் நபர் பணம் கேட்டு மிரட்டுகிறார். ஊருக்கே சென்று கிரிஸ் விளையாட்டு கொண்டிருக்கும் பொழுது அவருடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்து ரோகினிக்கு அனுப்பி வைக்கிறார். பிறகு ரோகிணியை சந்தித்து பேசின நிலையில் எனக்கு ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து செட்டில் பண்ணி விடு.

முத்து மீனா பிரிவதற்கு சகுனி வேலையை பார்த்த ரோகினி

உன் விஷயத்தில் தலையிடவே மாட்டேன், நீ இருக்கும் பக்கம் கூட நான் வரமாட்டேன் என்று சொல்கிறார். இதனால் 9 லட்சம் ரூபாய் பணத்துக்கு என்ன பண்ணுவது என்று தெரியாத ரோகிணி லோக்கல் ரவுடி சிட்டி இடம் உதவி கேட்கிறார். அந்த வகையில் நீ ஜெயிலுக்கு அனுப்பிய நபர் மறுபடியும் வெளியே வந்து என்னிடம் அதிக பணத்தை கேட்டு மிரட்டுகிறார். அதனால் அவரை என்ன வேணாலும் பண்ணிக்கோ என் விஷயத்தில் தலையிடாத மாதிரி பார்த்துக் கொள் என்று சொல்கிறார்.

அதற்கு அந்த லோக்கல் ரவுடி சிட்டி, இதுதான் சான்ஸ் என்று அவர் ஒரு கணக்கு போடுகிறார். அதாவது நீ சொல்ற மாதிரி நான் எல்லாமே உனக்கு சாதகமாக பண்ணித் தருகிறேன். ஆனால் அதற்கு பதிலாக நீ எனக்கு ஒரு விஷயம் பண்ண வேண்டும் என்று டிமாண்ட் பண்ணுகிறார். அந்த வகையில் உன் மாமியாரிடமிருந்து பணத்தை பறித்து விட்டு போனது வேறு யாருமில்லை மீனாவின் தம்பி சத்யா தான்.

இந்த விஷயம் முத்துவுக்கும் தெரியும், இது சம்பந்தமான வீடியோ அவருடைய போனில் இருக்கிறது. அதை நீ யாருக்கும் தெரியாமல் எப்படியாவது சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை அனுப்பி வைத்து விடு. மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று லோக்கல் ரவுடி சிட்டி, ரோகினிடம் கேட்கிறார். அதற்கு ரோகிணி எத்தனை நாள் விட்டுவிட்டு இப்பொழுது ஏன் என்னை விட்டு செய்ய சொல்கிறாய் என்று கேட்கிறார்.

உடனே லோக்கல் ரவுடி சிட்டி, எனக்கு ஒரு காரணம் இருக்கிறது. உன்னால் எப்படி உண்மையை வெளியே சொல்ல முடியாது. அதே மாதிரி என்னால் எல்லாத்தையும் உன்னிடம் சொல்ல முடியாது. நான் சொல்வதற்கு நீ சம்மதித்தால் நீ சொன்ன வேலை நான் கச்சிதமாக முடிக்கிறேன் என்று டில் பேசுகிறார். ரோகிணிக்கும் வேற வழி இல்லாததால் தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக லோக்கல் ரவுடி சொன்ன விஷயத்திற்கு கூட்டணி வைத்து விடுகிறார்.

அதன்படி ரோகினி வீட்டிற்கு வந்து முத்து மொபைலில் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பிவிடுகிறார். இதனைப் பார்த்ததும் மீனாவின் குடும்பம் அனைவரும் அதிர்ச்சியாகி சத்யாவிடம் சண்டை போடுகிறார்கள். அத்துடன் விஜயாவிற்கு இந்த விஷயம் தெரிந்ததால் இதை வைத்தே மீனாவே அசிங்கப்படுத்தி குடும்பத்தை அவமானப்படுத்தும் அளவிற்கு மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பிளான் பண்ணுகிறார்.

இது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் உங்களுக்கு தெரிந்தும் ஏன் என்னிடம் இவ்வளவு நாள் சொல்லாமல் மறைத்தீர்கள். இப்பொழுது எப்படி எல்லாத்துக்கும் தெரியும் படி சமூக வலைதளங்களில் அனுப்பி எங்க குடும்பத்தையும் என்னை அசிங்கப்படுத்தி இருக்கீங்க என்று சண்டை போடுகிறார். அது மட்டும் இல்லாமல் நீங்க கேட்ட பணத்தை நான் கொடுக்காததால் என்னை இப்படி பழிவாங்கி விட்டீர்களா என்று மீனா, முத்துமிடம் கோபப்படுவார்.

அந்த வகையில் இப்பொழுது முத்து மற்றும் மீனா இடையில் விரிசல் விழுந்து இரண்டு பேரும் பிரியும் நிலைமைக்கு வந்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் ரோகினி நினைத்தபடி அந்த வீட்டில் ஜாலியாக இருந்து கொண்டு கிரீஸ் மற்றும் அம்மாவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து அவர்களுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையே வாழப் போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்