Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-udhayanithi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு லிமிட் மெயின்டெயின் பண்ணும் உதயநிதி.. இன்று வரை விஜய் உடன் நெருங்காத ரகசியம்

விஜய்யுடன் உதயநிதிக்கு ஏற்பட்ட பிரச்சினையை தாமக முன்வந்து சரி செய்துள்ளார்.

ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் விஜய் மற்றும் உதயநிதியும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். விஜய் யாரையும் மிகவும் நெருங்கி பழக அனுமதிக்க மாட்டாராம். எல்லோரிடமும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவாராம்.

ஆனால் அப்படி நெருங்கி பழகிவிட்டால் ரொம்பவும் உரிமையை எடுத்து பழகிவிடுவாராம். இடையில் கூட பழகியவர்களே உதயநிதியை பற்றி விஜய் இடமும், விஜய்யை பற்றி உதயநிதி இடமும் தப்பு தப்பாக கூறி, அந்த இடைவேளையை பெரிய இடைவெளியாக மாற்றிவிட்டனர்.

Also Read: விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்

உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்த போதே அரசியலில் ஆர்வம் காட்டியதால், அப்போதிலிருந்தே விஜய்யை எதிரியாக பார்த்ததாக ஒரு தரப்பில் சொல்லப்பட்டது. அதாவது வருங்காலத்தில் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தில் தான் உதயநிதி விஜய்யுடன் ஒட்டாமல் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணி இருக்கிறார்.

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் விஜய்யும் வாரிசு படத்தை உதயநிதிக்கு கொடுக்காமல் லலித்திடம் கொடுத்தார். அப்படியும் உதயநிதி தான் வாரிசு படத்தை சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளியிட்டது. ஏனென்றால் தமிழ் சினிமாவில் உதயநிதி நினைத்தால் மட்டுமே படம் வெளியிட முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

Also Read: தளபதி கைவிட்டதால் அஜித்தை தட்டி தூக்கிய மகிழ் திருமேனி.. அதிர்ஷ்டம் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகுது

மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் உதயநிதி அவர்கள் சில வருடங்களாக ஒரு சில காரணங்களால் விஜய்யிடம் பேசுவதில்லை என்று கூறினார். ஆனால் உதயநிதி தன்னுடைய திரை பயணத்தை ஒரு தயாரிப்பாளராக விஜய்யை வைத்து குருவி படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அவருடைய தேதிக்காகவே நீண்ட நாட்களாக காத்திருந்து அந்த படத்தை தயாரித்ததாகவும், இருவருக்கும் இடையே பரஸ்பர நட்புடனே இருந்துள்ளனர்.

ஆனால் இடையில் சூனியக்காரர்கள் செய்த சூழ்ச்சியால் இருவரும் ஒருவரை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள நேரிட்டது. இந்த விஷயம் உதயநிதிக்கு தெரியவந்தது. அதன் பின் உதயநிதியே நேரில் சென்று விஜய்யை பார்த்து உண்மையை கூறினாராம். அதன் பிறகு இப்பொழுது ஒரு லிமிட்டுடன் இருவரும் பழகி வருகின்றனர்.

Also Read: உதயநிதி, விஜய்க்கு இடையே மறைமுகமாக ஏற்பட்ட சண்டை.. வாரிசு மேடையில் பதிலடி கொடுக்க நாள் குறித்த இளையதளபதி

Continue Reading
To Top