Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துக்கு ஜிம் பயிற்சியாளர் ஒரு பெண்ணா? சிக்ஸ்பேக் வைத்து மிரளவைக்கும் லேடி!
சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ரெகுலராக உடற்பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் நிறைய இளம் நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை தங்களது உடலை பராமரிக்க உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சில நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு அதை மெயிண்டெயின் செய்து வருகின்றனர். தல அஜித்துக்கு நீண்ட நாட்களாகவே சிக்ஸ் பேக் வைக்க ஆசை. ஆனால் ஆபரேஷன் பண்ணியதிலிருந்து மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் சிக்ஸ் பேக் வைக்க முடியாத சூழ்நிலை.
இருந்தாலும் விவேகம் படத்தில் தனது உடலை மிகவும் ஃபிட்டாக மாற்றினார். ஆனால் பாதி படம் வரை ஃபிட்டாக இருந்த அஜித் மீதி பாதி படத்தில் தொப்பையுடன் வலம் வந்தார்.
தற்போது வலிமை படத்திற்காக உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம். தல அஜித்துக்கு உடல் எடையை பராமரிக்க கற்றுத்தருவது ஒரு பெண் என்றால் நம்ப முடிகிறதா.

kiran-dembla-ajith-trainer
ஆம். ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரண் டேம்லா என்ற பெண்தான் தல அஜித்துக்கு உடற்பயிற்சி டிரைனராக வலம் வந்துள்ளார். இவர் சூர்யாவுக்கும் உடற்பயிற்சிகள் செய்ய கற்றுக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kiran-dembla-ajith-trainer-01
