Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜீத்துக்கு ஒரு மாஸ் கதை சொல்ல போகும் பெண் இயக்குனர்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் தல61
தற்போது தமிழ் சினிமா தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரையும் தான் நம்பி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்கள்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இருவரின் படங்கள் நன்றாகவே இல்லை என்றாலும் வசூல் ரீதியாக எந்த குறையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் வலிமை படத்திற்கு பிறகு அஜித்தை யார் இயக்குவது என்பது தான்.
தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் தல அஜித், தனது அடுத்த படத்தில் எந்த விதமான கதாபாத்திரத்தில் எந்த இயக்குனருடன் நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா தளபதி விஜய்க்கு ஒரு கதையை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தளபதி விஜய் தனது அடுத்த படத்திற்கு ஏ ஆர் முருகதாஸை தேர்வு செய்துவிட்டார் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா தல அஜீத்துக்காக ஒரு கதை உருவாக்கி இருப்பதாகவும், விரைவில் அஜித்திடம் அதனை கூற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தரமான படங்களை இயக்கிவரும் சுதா கொங்கராவிடம் அஜித் தனது தல61 படத்திற்கான வாய்ப்புக் கொடுப்பாரா என இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
