Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா தான் பெஸ்ட்.. அஜித் – விஜய் வேஸ்ட்.. வெளுத்து வாங்கும் பெண் இயக்குனர்
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இன்றைய தமிழ் சினிமாவை இவர்களை நம்பித்தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. காரணம் இவர்களின் பட ரிலீஸ் என்றாலே தமிழகமெங்கும் திருவிழாவைப் போல் காட்சியளிக்கும். மேலும் போட்ட பணத்தை மூன்று நாட்களிலேயே எடுக்கும் வல்லமை கொண்டவர்கள்.
ஆனால் வல்லமை தாராயோ என்ற படத்தை இயக்கிய பெண் இயக்குனர் மதுமிதா, சூர்யாவை உயர்வாகப் பேசி, தல மற்றும் தளபதி தாழ்வாக பேசியும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், சூர்யா எப்பொழுதும் பெண் இயக்குனர்களுடன் பணியாற்ற தயாராக இருப்பார். அவர்களின் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்து செயல்படுவார்.
ஆனால் அஜித், விஜய் போன்றவர்கள் பெண் இயக்குனர்களின் கதைகளில் நடிக்க விரும்பவில்லை. மேலும் அவர்களது மேனேஜர்களே கதைசொல்ல செல்லும்போது பெண் இயக்குனர்களுடன் அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள் என சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.
இதனால் தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதை போல பெண் இயக்குனர்களின் கதைகளிலும் நடிக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை கூறியுள்ளார்.
