ஏ.எல்.விஜய்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் ரிலீசுக்கு ரெடி ஆக உள்ள படம் “கரு”. இதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தின் பெயர் ‘லக்ஷ்மி’. இப்படம் நடனத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படம்

Team Lakshmi

லக்ஷ்மி

இப்படத்தில் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் குழந்தை தித்யா (‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோ வின்னர் ), கருணாகரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்,  ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரெடியாகும் லக்ஷ்மியை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ் – பிரமோத் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். நேற்று தலைப்பு, மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இன்று மாலை இதன் டீஸர் வெளியாகியுள்ளது.