புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நாசுக்காக காய் நகர்த்தும் தாத்தா.. அசால்டாக அடித்து நொறுக்கும் மன்மதன் கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு ராதிகாவுடன் அதே தெருவில் தங்கி இருக்கும் கோபி, தன்னுடைய மகளின் மனதை கலைத்து தன்னுடனே அழைத்து சென்று விட்டார். எனவே இனியாவை மறுபடியும் பாக்யாவிடம் சேர்ப்பதற்காக கோபியின் அப்பா ராமமூர்த்தி கோபியின் வீட்டில் இருக்க சென்றுள்ளார்.

அங்கு ராதிகாவின் சமையல் சுத்தமாக பிடிக்காததால், பாக்யா வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பேத்தி இனியாவிற்கும் சாப்பாடு எடுத்து செல்கிறார். அந்த உணவை சாப்பிட்டு இனியா தன்னுடைய அம்மாவை நினைத்து கலங்குகிறார். அவருடன் சேர்ந்து இருக்கவும் விரும்புகிறார்.

Also Read: முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

இதைப் பற்றி கோபியுடன் பேசும் போது, அவர் இனியாவை சமாளித்து விடுவதுடன் ஏதேதோ பேசி தன்னை விட்டு பிரியக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். இப்படி நாசுக்காக அப்பா ராமமூர்த்தி காய் நகர்த்தயதை மகன் கோபி, அசால்டாக அடித்து நொறுக்குகிறார்.

மறுபடியும் அமிர்தா-எழில் காதலுக்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது. ஏனென்றால் எழில் தயாரிக்கும் படத்தின் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழிலை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அமிர்தாவின் வீட்டாரிடம் சொல்லிவிட்டார்.

Also Read: கண்டாங்கி சேலையில் காட்டுத்தனமான கவர்ச்சியில் சீரியல் நடிகை.. இளசுகளுக்கு குளிர் ஜுரம் வந்துடும் போல

இந்த விஷயம் தெரிந்ததும் அமிர்தாவின் பெற்றோர் அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டனர். பிறகு குடும்பமே சீக்கிரம் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு இடம் பெயர்வதாகவும் எழிலிடம் சொல்கின்றனர். தன்னுடைய காதலி தன்னை விட்டு பிரிந்து சென்றதும்,  பேசாமல்இருப்பதும் எழிலுக்கு நரக வேதனையாக இருக்கிறது.

பிறகு எழில் பாக்யாவிடம் அமிர்தாவிற்கும் தனக்கும் இருக்கும் காதலை வெளிப்படுத்தப் போகிறார். இதன் பின் பல போராட்டங்களுக்கிடையே குடும்பத்தினரின் சந்தோஷத்துடன் அமிர்தாவை எழில் சீக்கிரம் கரம் பிடிக்கப் போகிறார். இதை தான் சீரியல் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Also Read: திடீர்னு திருமணம் செய்து கொண்ட பாக்கியலட்சுமியின் மருமகள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

- Advertisement -

Trending News